அழுக்கானது ஆனால் அருமையானது?

வேகத்தை கொன்று விடு. அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு?

வேகத்தை கொன்று விடு. அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு?

இறுகிய மனம் வேண்டும்.
எல்லையில்லா சுதந்திரம் வேண்டும்.
உருவம் மொத்தத்தையும் வளைத்து
உறவாட தெரிந்தல் வேண்டும்.

கற்பனை நயம் வேண்டும்.
காலமறிந்து நெருங்க வேண்டும்.
இன்னா சொல் இனியவை மறந்து
இனியொரு விதி செய்தல் வேண்டும்.

கவலையில்லா தலை வேண்டும்.
கருத்து மறந்த பேச்சாடல் வேண்டும்.
நித்தமும் மொத்தமாய் சுயத்தையிழந்தாலும்
சுரணை மறந்த சுகமும் வேண்டும்.

உரையாடத் தெரிதல் வேண்டும்
ஒளித்து வைத்து உருக வேண்டும்.
கல்லாலோ சொல்லாலோ அடித்தாலும்
எந்நாளும் கலங்காத மனமும் வேண்டும்.

நித்தம் கூடிப் பேச வேண்டும்
முடிந்து குதுகலமாய் பிரியவேண்டும்.

நெறிமுறைகள் உள்ளே உச்சரித்தாலும்
வழிமுறைகள் மறந்து முன்னேற வேண்டும்.

மொத்தமாய் சத்தமாய் பேச வேண்டும்.
முழு நிலா பிறை என்றால்
பொழுதெல்லாம் முன் மொழிய வேண்டும்.

சாக்கடை வழியே சந்தோஷமளிக்கும்.
சரசமாடி உறவாட உள்வாங்கல் வேண்டும்.
உறவான உறவுக்குள் உள்மத்தமானதும்
தளவர்மறிய மனதுடன் தொடர்தல் வேண்டும்.

நாடகம் தொடர்தல் வேண்டும்.

தரையோ தண்ணீரோ தரையிலிருந்து கவனிக்கும் கண்கள்

தரையோ தண்ணீரோ தரையிலிருந்து கவனிக்கும் கண்கள்

எத்தனை புயல்களை
சந்தித்தாய்?

யாருக்கும் தேவையில்லை?

கரைக்குச் சேர்த்தாயா?

கட்டுமானம் என்பதே வாழ்க்கை முழுக்க தொடர்வது தானே?

கட்டுமானம் என்பதே வாழ்க்கை முழுக்க தொடர்வது தானே?

திரும்பிப் பார்த்தால்
தெரியும் வலி
திருந்தி விடு.

உயர்வான ஆசைகள்
உலகத்தில் மாறும்
உள்ளுற வைத்துக்கொள்.

தீவிரமென்பது எதுவோ
திருத்தப்படலாம்.
புகுத்தப்பட்ட பாதை
புலப்படலாம்.

பாவமென்பது
செயலுமல்ல,
பழகியவனுக்கு
புதிருமல்ல.

போராட்டம்
ஆர்ப்பாட்டம்
புகை எரிச்சல்
பொறுத்து
புன்னகைக்க

புதிய பாதை.
புதிய மனிதன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s