வேலை நாட்களும் இல்லாத நாட்களுமாய்……. 1

வேலை நாட்களும் இல்லாத நாட்களுமாய்…….

ஏற்றுமதி நிறுவனத்தை அதன் பாதையை அறிமுகபடுத்திய நண்பர் முதலில் சேர்ந்த நிறுவனத்தின் முகவரியை கொடுத்ததோடு ஒதுங்கி விட்டார்.

திருப்பூரில் ஆறு மாதங்கள் இருந்த போதிலும் எங்கும் சென்றது இல்லை. வாய்ப்பும் இல்லை. நூல் வியாபாரத்தில் அதிக பழக்கமும் இல்லை. அலுவலகம் என்பது வீட்டின் அமைப்பு. மேலே முதலாளியின் வசிப்பிடம். கீழே உள்ள முகப்பறை மற்றும் தொடர்ச்சியான விசாலமான அறையுமே மொத்த அலுவலகம். எல்லாமே தொலைபேசி வழியே முடிவு செய்யப்பட்டு விடும். வேண்டுகின்ற நூல் வகைகள் வருகின்ற வண்டிகாரர்கள் கொண்டு வருகின்ற சீட்டும் காசோலையும் பெற்றுக்கொண்டு நேரிடையாக நூல் அடுக்கிவைத்துள்ள இடத்துக்கு சென்றால் அனுப்பப்பட்டு விடும்.

காலை ஒன்பது மணி தொடங்கி மாலை ஐந்து மணி வரையில். எப்போதாவது இரவு நேரம். தொடக்கத்தில் நூல் மொத்தமாக அடுக்கி வைத்துள்ள கோடவுன் வேலை. பெரிதாக ஒன்றும் இல்லை. கோடவுன் சாவியை பூட்டி வைத்துக் கொண்டு வௌியே உள்ள கயிற்றுக் கட்டிலில் கொண்டு போயுள்ள வாடகை நூலகத்தில் இருந்து எடுத்துச் சென்ற புத்தகங்களை படித்தாலே மதிய சாப்பாடு வந்து வடும். இடையில் சில வண்டிகாரர்கள். சீட்டு பார்த்து நூலை ஏற்றி விடவேண்டும்.

மூன்று நேரத்திற்கும் அலுவலகத்தில் உள்ள நண்பர் சமைத்து வைத்து விட்டு சென்ற சாப்பாடு சட்டியில் இருக்கும். ஓய்வு எடுக்கலாம் அல்லது மறுபடியும் கோடவுன் வந்து விடலாம். நமது சௌகர்யம். எங்கள் கோடவுன் போல் எதிரில் இருக்கும் மற்ற மில்களின் கோடவுன் வேலையாட்கள், வண்டிகாரர்கள். வினோதமான பழக்கவழக்கங்கள், பேச்சுகள். புதிதான கொங்கு பாஷை. ஏன் வம்பு என்று முழுமையாக புத்தகங்களின் துணையோடு முழு பொழுதையும் கழித்து விடுவதுண்டு,

எதிரே இருக்கும் பெண் பல நாட்கள் பார்த்து விட்டு பொறுக்க முடியாமல் ஒரு நாள் அருகில் வந்து கேட்டார். படித்து படித்து பைத்தியம் ஏதும் பிடித்து விடப்போகின்றது என்று. எத்தனை பாலகுமாரன் எத்தனை சுஜாதா? கணக்கில்லை.

வாங்கிய ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த நண்பருடன் சாப்பாட்டு செலவுக்கு பகிர்ந்தது போக மொத்தமாக மிஞ்சியது 820 ரூபாய். எப்படி செலவழிப்பது என்று தெரியாத மக்குப் பையன். நண்பரோ எல்லா பழக்கத்திற்கு அஞ்சா நெஞ்சன். முன்னாள் எம்.எல்.ஏ. வகையில் வந்த சொந்தம். கல்லூயில் மொத்த 36 பாடத்தில் ஒரு பாடம் கூட தேர்வு பெறாமல் மூன்று ஆண்டுகள் மொத்தத்தையும் குடியிலும் மடியிலும் கழித்தவர். முரட்டு சுவாபம். ஆனால் மூத்த அண்ணன் வகுப்புத் தோழன் என்று அந்தஸ்தில் அருகில் பிரச்சனை இல்லாமல் வைத்துக் கொண்டதை பார்த்து நான் கடைசியாக வௌியே வரும் போது முதலாளி சொன்னது, இவனிடம் அடி வாங்காமல் பிரச்சனை இல்லாமல் பழகிய ஒரே மனிதன் நீதானப்பா?.

காரணம் அப்பா? ஊரில் கல்லூரி முடிக்கும் வரையில் இரவுப் பொழுது என்பதில் வௌி உலகம் எப்படி இயங்கும்? என்ன மாதிரி சூழ்நிலை என்பதே அனுமானிக்கத் தெரியாமல் சிறையாய் வாழ்ந்த வாழ்க்கையில் இரவு பத்து மணி என்பது தூக்கத்தின் இரண்டாவது ஜாமம். பகல் நேரத்தில் எங்கேயாவது தெருத்சண்டை நடந்தாலும் அடுத்த சந்தின் வழியாக வீட்டுக்கு வந்து விட வேண்டும். சண்டை நடந்த இடத்தில் பார்த்ததாக யாராவது மூலம் தகவல் சென்றாலே அன்று இரவு மண்டகப்படி அவஸ்யம் நடக்கும்.

நாங்களாவது கடைக்குச் செல்லும் சாக்கில் வௌியே செல்வோம். அக்காக்களுக்கு அதுவும் இல்லை. மாப்பிள்ளைகள் தான் அவர்களுக்கு வௌி உலகை அறிமுகப்படுத்தியவர்களாக இருப்பார்கள்.

நூல்கடையில் எந்தப் பெரிதான பிரச்சனையும் இல்லை. ஆனால் மூளை மழுங்கி விடும் அளவிற்கு இருட்டு அறை சிறை வாசம் போல் இயந்திர வாழ்க்கை போல் அமைய அப்போது தான் உடன் பணிபுரிந்த நண்பனிடம் கேட்டேன். என்னை எப்படியாவது வேறு நல்ல வேலையில் சேர்த்து விடுங்கள்?

எனக்கு முன்னால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவர் இங்கு சேர்ந்துருந்த காரணத்தால் அவர் மூளையும் உடம்பும் பழகி விட்டது. அவர் முப்பது வயது தோற்றமே ஐம்பது வயது நடவடிக்கை மாதிரி. செட்டியாருக்கு அந்த மாதிரி ஆட்கள் தான் தேவை. சிந்திக்கக் கூடாது. சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். நடு இரவில் எழுப்பி கழிப்பறையை கழுவச் சொன்னால் கேள்விகேட்கக் கூடாது.

ஒரு அளவிற்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. திரும்பி ஊருக்குச் செல்லவும் முடியாது. பிண்ணி பெடல் எடுத்து விடுவார் அப்பா?

நண்பரின் அறிமுகத்தின் மூலம் கிடைத்த மற்றொரு நண்பர் என்னைப் பார்த்து விட்டு கேட்ட கேள்வி நீங்கள் எக்ஸ்போர்ட் கம்பெனி போகிறீர்களா?

எனக்கு எக்ஸ்போர்ட் கம்பெனி என்றால் தலையும் தெரியாது வாலும் தெரியாது. முதலில் இங்கு இருந்து தப்பிக்க வேண்டும் என்று சரி என்று தலையாட்ட அவினாசி சாலையில் இருந்த நிறுவன முகவரி கொடுத்து நாள் குறித்து சொல்லி விட்டு சென்று விட்டார். வௌியேறுகிறேன் என்றது பெரிதான எதிர்ப்பு இல்லை. ஓரே ஊர் என்பதால் பிரச்சனை செய்தால் அனைவருக்கும் தெரிந்து விடும் என்று நினைத்து இருப்பாரோ என்று எண்ணிக்கொண்டு வேறு ஒரு நிறுவனத்தில் என்னைப் போல் போராடிக்கொண்டுருந்த பள்ளித் தோழன் துணை கொண்டு அவனின் சைக்கிளில் வாங்கி இருந்து புதுப் பேக்கில் புதுச்சட்டை பேண்ட் சுமந்து கொண்டு அணிந்து இருந்த அதே வேட்டி சட்டையுடன் சைக்கிளை தள்ளிக்கொண்டு பேசிக் கொண்டே ஒரு மாலை வேலையில் சேர்ந்த நேரம் ஞாயிற்றுக்கிழமை.

அந்த ஏற்றுமதி நிறுவன முதலாளி ஏற்கனவே சொல்லி வைத்துருந்த காரணத்தால் நிறுவனத்தை ஒட்டிய சந்துக்குள் முட்டும் அறையில் புதிய எக்ஸ்போர்ட் கம்பெனி பணியாளராக வாழ்க்கைத் தொடக்கம்……………..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s